நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம், விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். – விரக்தியில் சம்பந்தன்

நாம் பொறு­மை­யின் எல்­லை­யைத் தாண்­டி­விட்­டோம். பல விட்­டுக் கொடுப்­பு­க­ளை­யும் செய்­துள்­ளோம். இனி­மேல் பொறு­மைக்­கும் விட்­டுக்­கொ­டுப்­புக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இட­ம­ளிக்­காது.

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர அர­சி­யல் தீர்வே வேண்­டும். இதனை நாம் அடைந்­து­கொள்ள இலங்கை அர­சுக்கு தென்­னா­பி­ரிக்க அரசு கடும் அழுத்­தங்­க­ளைக் கொடுக்­க­வேண்­டும்.

இவ்­வாறு எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

இலங்­கைக்­கான தென்­னா­பி­ரிக்­கத் தூது­வர் ரொபினா மார்க்ஸ், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் ஆகி­யோ­ருக்­கி­டை­யி­லான முக்­கிய சந்­திப்பு நேற்று நடை­பெற்­றது.

நாடா­ளு­மன்­றத்­தி­லுள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் இந்­தச் சந்­திப்பு நடை­பெற்­றது. இதன்­போதே எதிர்க்­கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

இந்­தச் சந்­திப்­பில் புதிய அர­ச­மைப்பு, இலங்­கை­யின் தற்­போ­தைய அர­சி­யல் முன்­னேற்­றங்­கள், நல்­லி­ணக்­கம் மற்­றும் பொறுப்­புக்­கூ­றல் விவ­கா­ரங்­கள் தொடர்­பில் விரி­வா­கக் கலந்­து­ரை­யா­டப்­பட்­டன.

-tamilcnn.lk

TAGS: