தன் மகளை முன்னாள் மனைவி எம்.இந்திரா காந்தியிடம் ஒப்படைக்க மறுக்கும் முகம்மட் ரித்வான் அப்துல்லாவைத் தேடும் நடவடிக்கையை நிறுத்தவில்லை எனப் போலீஸ் கூறுகிறது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஈப்போ உயர் நீதிமன்றம் மகளை முன்னாள் மனைவியிடமே ஒப்படைக்குமாறு ரித்வானுக்கு உத்தரவிட்டதிலிருந்து அவரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க போலீஸ் முயன்று வருகிறது என புக்கிட் அமான் சிஐடி இயக்குனர் வான் அஹ்மட் நஜ்முடின் முகம்மட் இன்று ஓர் அறிக்கையில் கூறினார். அவரைக் கண்டால் தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
ரித்வானின் நிழற்படத்தையும் வெளியிட்ட வான் அஹ்மட், இது குறித்து பொதுமக்கள் ஊகங்களில் இறங்கக் கூடாது என்று இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன் அறிவுறுத்தியிருப்பதையும் நினைவுறுத்தினார்.
முன்னாள் காவல் துறை தலைவர் தேடிக்கிட்டு இருக்கோம் என்று சொல்லி பிஞ்சின் வாங்கிட்டு போயிட்டாரு. வந்தவரு பிஞ்சின் ஆகும் முன்னமே பிடிச்சா சரி…இல்லேனா அடுத்தவரு வந்தா பார்க்கலாம்.