’ஐயா, நான் பெக்கானுக்கு ஆயுதங்களுடன் செல்லவில்லை’- மகாதிர் கிண்டல்

டாக்டர்   மகாதிர்  முகம்மட்  நாளை   பகாங்கில்,      பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்கின்   கோட்டையான   பெக்கானுக்குச்   செல்லும்போது   ஆயுதங்களை  எடுத்துச்  செல்லவில்லை   என்றும்   பேசுவதற்கு  மட்டுமே   செல்வதாகவும்  கூறினார்.

தங்கள்   தொகுதிக்கு  வந்தால்   கலகம்    மூளலாம்  என்று  பெக்கான்   அம்னோ  எச்சரித்திருப்பது   குறித்துக் கருத்துரைத்தபோது  மகாதிர்  அவ்வாறு   கூறினார்.

“கலகம்  செய்வார்கள்   என்பதை    அவர்களே  ஒப்புக்கொள்கிறார்கள்.

“முன்கூட்டியே   அங்கு  செல்லும்   திட்டம்  இருந்தது. இப்போது  கலவரம்   நடக்கலாம்   என்று    அம்னோ   கூறுகிறது”,  என  இன்று   பெட்டாலிங்   ஜெயாவில்    செய்தியாளர்   கூட்டத்தில்   மகாதிர்   கூறினார்.