பொதுத் தேர்தலுக்கான முக்கிய தேதிகள் குறித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையம் நாளை கூட்டம் நடத்துகிறது

 

14 ஆவது பொதுத் தேர்தலுக்கான தேதிகள் குறித்து தேர்தல் ஆணையம் ஒரு முக்கியமான கூட்டத்தை நாளை நடத்துகிறது.

தேர்தல் நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்கும் தேதி, வேட்பாளர் நியமனத்திற்கான தேதி, முன்னதாக வாக்களிப்பதற்கான தேதி மற்றும் வாக்களிப்புக்கான தேதி ஆகியவை குறித்து கூட்டம் விவாதிக்கும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் அப்துல் கணி சாலே கூறினார்.

14 ஆவது பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்காளர் பட்டியல் மற்றும் தேர்தல் நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்படும் என்று அவர் புத்ரா ஜெயாவில் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார்.

14 ஆவது பொதுத் தேர்தலுக்காக நாடாளுமன்றம் ஏப்ரல் 7 இல் கலைக்கப்பட்டது.

  • பெர்னாமா