அரசாங்க அமைப்புகளைச் சீரமைக்கும் குழு (ஐஆர்சி) இதுவரை ஏழு பரிந்துரைகளை அரசாங்க ஆலோசனை மன்ற(சிஇபி)த்திடம் சமர்ப்பித்துள்ளது.
இன்று கோலாலும்பூரில் அப்பரிந்துரைகள் குறித்து இல்ஹாம் கோபுரத்தில் சிஇபி-இடம் விளக்கமளித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐஆர்சி உறுப்பினர்களில் ஒருவரான அம்பிகா ஸ்ரீநிவாசன், “ “உடனடியாக ஏழு பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன”, என்று தெரிவித்தார்.
“ஏழு பரிந்துரைகளும் ஐஆர்சி ஏற்கனவே சிஇபி-இடம் வழங்கிய மூன்றாவது அறிக்கையில் அடங்கியுள்ளன”, என ஐஆர்சி-இன் இன்னோர் உறுப்பினரான மா வெங் குவாய் கூறினார்.
இன்று கொடுக்கப்பட்டது நான்காவது அறிக்கை. ஐஆர்சி-இன் இறுதி அறிக்கை ஜூலை 15-இல் ஒப்படைக்கப்படும் என மா கூறினார்.
“இறுதி அறிக்கைதான் முழுமையானது. அதில் எல்லாப் பரிந்துரைகளும் விவரங்களும் உள்ளிட்டிருக்கும்”, என்றாரவர்.