டிரம்ப் நிர்வாகத்தின் பயணத்தடையை உறுதிசெய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்

முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள பல நாடுகள் மீது டிரம்ப் நிர்வாகம் விதித்த பயணத்தடைக்கு ஆதரவாக அமெரிக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அந்நாட்டிலுள்ள கீழமை நீதிமன்றங்கள் இந்த பயணத் தடையை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று கூறியிருந்த நிலையில், அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமையன்று விசாரணைக்கு வந்த வழக்கில் ஐந்தில் நான்கு நீதிபதிகள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த பயணத்தடையானது இரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் யேமனை சேர்ந்த பெரும்பாலானோர் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடுக்கிறது.

நீதிமன்றத்தின் இந்த தலைகீழ் தீர்ப்பு டிரம்ப் நிர்வாகத்தின் வெற்றியாக கருதப்படுகிறது.

ஆனால், இந்த பயணத்தடையானது அகதிகள் மற்றும் மனித உரிமைக் குழுக்களால் பரவலாக விமர்சிக்கப்படுகிறது. -BBC_Tamil