முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு (கருணா) எதிராக ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
முதல் முறையாக முரளிதரனுக்கு எதிராக போர் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்கோவிலில் 600 பொலிஸாரை கொலை செய்தமை தொடர்பிலேயே அவருக்கு எதிராக குறித்த போர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருணாவுக்கு எதிராக தான் முறைப்பாடு செய்துள்ளதாக புலம்பெயர் அமைப்பின் பொறுப்பாளரான பேராசிரியர் பொல் நிவுமன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-athirvu.in