தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யவில்லை என்கிறார் நஜிப்

 

மே 9 இல் பிஎன் 14 ஆவது பொதுத் தேர்தலில் தோற்று விட்டது என்பது தெளிவானதும் தாம் தேசியப் பாதுகாப்பு மன்றம் கூடுவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்று முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறினார்.

“நான் ஒரு ஜனநாயகவாதி. எனக்கு மக்களின் தீர்ப்பில் நம்பிக்கையுண்டு. நான் தேசிய பாதுகாப்பு மன்றக் (என்எஸ்சி) கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ததாக என் மீது குற்றம் சாட்டுகின்றனர் (ஆனால்) அப்படி ஒரு கூட்டம் இல்லை>

“நீங்கள் அனைத்து உறுப்பினர்களையும் கேட்கலாம்”, என்று கடந்த வாரம் மலேசியாகினியுடனான ஒரு சிறப்பு நேர்காணலில் நஜிப் கூறினார்.

பொதுத் தேர்தல் வாக்களிப்புக்கு முன்னர், பக்கத்தான் ஹரப்பான் தலைவர் மகாதிர் முகமட், தேர்தலில் தோற்று விட்டால் நஜிப் ஆட்சியை ஒப்படைக்க மாட்டார். அவர் தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் உதவியை நாடுவார். ஏனென்றால் அவருக்கு கைது செய்யப்படுவோம் என்ற பயம் உண்டு பல தடவைகளில் கூறியுள்ளார்.

ஆனால், அது போன்ற “திட்டம் பி” (“Plan B”) ஏதும் இல்லை என்று மலேசியாகினியிடம் கூறிய நஜிப், நாடு அவசரகால நிலைமையில் இருப்பதை தாம் விரும்பவில்லை என்றார்.

நாட்டில் இரத்தக்களரி ஏற்படக்கூடாது. என்னைப் பொறுத்தவரையிம் அதற்கு இடமே இல்லை என்று நஜிப் கூறினார்.