இரானில் கள்ளச்சாராய மரணங்கள்

இரானில் கெட்டுப் போன கள்ளச்சாராயத்தை அருந்தியதன் காரணமாக குறைந்தது 42 பேர் பலியானார்கள் என்று இரான் அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் இராஜ், 16 பேர் பார்வைத் திறனை இழந்ததாகவும், 170 பேர் டையாலிஸ் சிகிச்சை பெறுவதாகவும் தெரிவித்தார். கடந்த மூன்று வாரங்களில், ஐந்து மாகாணங்களில் 19 வயது பெண் ஒருவர் உட்பட 460 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. -BBC_Tamil

TAGS: