சிரியா – ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள 50,000 மக்கள் – உதவிகளுடன் ஐ.நா குழு வருகை

சிரியா – ஜோர்டான் எல்லையில் சிக்கியுள்ள சுமார் 50,000 மக்களுக்கு முதலுதவிகள் செய்ய அதற்கு தேவையான பொருட்களுடன் ஐ.நா உதவிக்குழு வந்தடைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து முதன்முறையாக அவர்களுக்கு உதவி கிடைக்கப் பெற்றுள்ளது.

அக்டோபர் 27ஆம் தேதி ருக்பன் முகாமிற்கு வரவிருந்த உதவிகள், பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளிப்போடப்பட்டது.

ருக்பனை அணுகுவதை சிரியா ராணுவம் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ஜோர்டானும் அப்பகுதிக்கு உதவி வழங்குவதை தடுத்து வருகிறது.

மோசமான பாதுகாப்பு சூழல் மற்றும் முகாம்களில் போதிய மருத்துவ வசதிகள் இல்லாததால் குழந்தைகள் பல உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகின. -BBC_Tamil

TAGS: