ஒரு பேஸ் புக் போஸ்ட் போட்டதால் எரிந்த 100 கடைகள்- சிங்களவர் செயல்

நேற்றைய தினம் மதியம் முஸ்லீம் நபர் ஒருவர், பேஸ் புக்கில் ஒரு போஸ்ட் போட்டதால் ஏற்பட்ட கலவரத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட, முஸ்லீம்களின் கடைகள் எரிந்து நாசமாகியுள்ளது. நாங்கள் நினைப்பது போல இது மிகவும் சாதாரணமாக நடக்கவில்லை. மிகப்பெரிய அளவில், தேடி தேடி அழிக்கப்பட்டு வருகிறது.

சிங்களவர் தமிழர்களை அடித்தவேளை மற்றும் 83 கலவரங்களை எடுத்துக்கொண்டால், அவர்களை தமிழர்களை கொலை செய்து, வீட்டை உடைத்து சூறையாடினார்கள். ஆனால் இன்று சிங்களவர்கள் முஸ்லீம்களின் வியாபார ஸ்தலங்களை குறிவைத்தே தாக்குதல் நடத்துகிறார்கள்.

இது ஏதோ சிங்கள காடையர்கள் நடத்தும் தாக்குதல் அல்ல. இது நன்கு திட்டமிடப்பட்டு சிங்கள தலைமையின் கீழ் நடத்தப்படுகிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

 -athirvu.in
TAGS: