தமிழ் தலைமைகள் என்று சொல்லிக்கொள்ளும் துரோகிகளே இதனை கொஞ்சம் படியுங்கள்!

ஹிஸ்புல்லாவிடம் இருந்து தமிழ் தலைமைகள் எவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பின்னர் பார்ப்போம்.

ஒரு முஸ்லிம் சமூகத் தலைவரான ஹிஸ்புல்லா என்கின்ற தலைவர் தனது இனம் சார்ந்த தரிசனத்தில் அன்று முதல் இன்றுவரை மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்து வருகின்றார்.

வடக்கு கிழக்கு பிரிக்கப்படவேண்டும், கிழக்கு மகாணம் முஸ்லிம்களுக்குரியது, கிழக்கு மாகாணம் முஸ்லிம் தலைவர் ஒருவரால் ஆழப்படவேண்டும் – இவை ஹிஸ்புல்லாவின் உறுதியான அரசியல் நிலைப்பாடாக அன்று தொட்டு இருந்து வருகின்றது.

கிழக்கு மாணத்தின் முதலமைச்சர் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பது அவரது பேரவாவாக இருந்துவருகின்றது.

மேலே தொகுக்கப்பட்டுள்ள ஹிஸ்புல்லாவின் உரைகள் இவற்றை உறுதிப்படுத்தி நிற்கின்றன.

ஆனால் இதே உறுதிப்பாட்டை தமிழ் தலைமைகள் தமதாகக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்விக்கு, சற்றும் யோசிக்காமல் இல்லை என்றுதான் பதிலளிக்கவேண்டி இருக்கின்றது.

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களைவிட, சிங்களவர்களை விட இன்றைக்கும் தமிழர்களே பெரும்பாண்மையாக வாழ்ந்துவருகின்றார்கள் என்கின்ற உண்மையை தமிழ் தலைமைகள் மறந்து, கிழக்கில் தமிழர் தரப்புக்குக் கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகளையும், அதிகாரங்களையும், தலைமைப் பொறுப்புக்களையும் எந்தவித நியாயப்பாடுகளும் இல்லாமல் மற்றய சமூகங்களுக்கு தாரைவார்த்துக்கொடுப்பதை தமது தலையாய கடமையாக மேற்கொண்டு வருகின்றார்கள்.

கடந்த தடவை கிழக்கு மாகாணசபை ஆட்சியமைப்பின் பொழுது, 14 ஆசணங்களுடன் இருந்த த.தே.கூட்டமைப்பு, வெறும் 8 ஆசனங்களுடன் இருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு முதலமைச்சர் பதவியை எந்தவித அவசியமும் இல்லாமல் வழங்கி அழகு பார்த்திருந்தது.

கிழக்கில் ஒரு முஸ்லிம் முதலமைச்சர் வருவது முஸ்லிம் சமூகத்திற்கு நன்மைபயக்கும் என்று ஹிஸ்புல்லா நினைப்பது போன்று, கிழக்கில் ஒரு தமிழ் முதலமைச்சர் வருவது தமிழருக்கு நன்மைபயக்கும் என்று ஏன் தமிழ் தலைமைகள் நினைப்பதில்லை.

2008ம் ஆண்டு பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் மகிந்த அணியில் நின்று போட்டியிட்டதால், மகிந்தவின் ஆசீர்வாதத்தில் அந்த முதலமைச்சர் பதவி பிள்ளையான் என்ற தமிழனுக்கு கிடைத்தது. ஒருவேளை அதே பிள்ளையான் த.தே.கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தால், அந்த முதலமைச்சர் பதவியை ஒரு தமிழனுக்கு த.தே.கூட்டமைப்பின் தலைமை வழங்கியிருக்குமா என்பது நிச்சயம் ஒரு கேள்விக்குறிதான்.

2008ம் ஆண்டு கிழக்கின் முதலமைச்சர் பதவியை மகிந்தவினால் தவறவிட்ட ஹிஸ்புல்லா பெற்றுக்கொண்ட அமைச்சுப் பதவிகள் என்ன தெரியுமா?

Ministerfor Health and Indigenous Medicine, Social Welfare, Probation and ChildcareServices, Women’s Affairs, Youth Affairs, Sports, Information TechnologyEducation, Co-operative Development, Food Supply and Distribution

2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் பதவியை முஸ்லிம் தலைவரான நஜீப் அப்துல் மஜீத்துக்கு தாரைவார்த்துக்கொடுத்த போது, இப்படி பலம்வாய்ந்த அமைச்சுப் பதவிகளை எந்த ஒரு தமிழனுக்காவது த.தே.கூட்டமைப்பின் தலைமை பெற்றுக்கொடுத்திருந்ததா?

தமிழ் தலைமைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாவிடம் இருந்து நிறையக் கற்றுக்கொண்டுதானாகவேண்டும்!!

•தனது இனத்தை நேசிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டும்…

•தனது இனத்துக்காக போராடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவேண்டும்…

•தனது இனத்தைக் காப்பதற்கு எப்படி வியூகம் வகுப்பது என்று கற்றுக்கொள்ளவேண்டும்..

•தனது முதன்மை எதிரியை அடையாளம் காண்பது எப்படி என்று… கற்றுக்கொள்ளவேண்டும்…

•தமது கொள்கையின் பின்னனே தாம் சார்ந்த சமூகத்தை எப்படி அணி திரட்டுவது என்று கற்றுக்காள்ளவேண்டும்…

•விட்டுக்கொடுப்பு செய்வதாயின் அதனால் தனது இனத்திற்கும் நன்மைகள் ஏற்படும் விதத்தில் விட்டுக்கொடுக்கவேண்டும் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும்…

•தனது இனத்தின் நன்மைக்காக பேரம்பேசுவது எப்பபடி என்று கற்றுக்கொள்ளவேண்டும்…

•பதவிகள் என்பது வெறும் கொகுசு வாழ்க்கையின் மேலங்கி அல்ல- பதவிகள் என்பது தனது இனத்தின் நன்மைக்காக உபயோகப்படுத்தப்படவேண்டிய பலம்மிக்க ஆயுதங்கள் என்பதை கற்றுக்கொள்ளவேண்டும்…

த.தே.கூ.தலைமைகள் நிச்சயமாக ஹிஸ்புல்லாவிடம் இருந்து நிறையக் கற்றுக்கொள்ளவேண்டும்.

-athirvu.in

TAGS: