வௌிநாடு செல்ல முயன்ற தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாதி கைது?!

வௌிநாடு செல்ல முயன்ற தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய பயங்கரவாத சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையின் புலனாய்வுப்பிரிவு வழங்கிய தகவலுக்கு அமைய, பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜப்பான் செல்ல முயன்ற போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் துப்பாக்கி பயிற்சி பெற்றவர் என்பதுடன், தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஈடுபடுவதாக தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் முன்னிலையில் உறுதி மொழி வழங்கியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மொஹமட் அன்சார் மொஹமட் ரினாஸ் என்ற இந்நபர் மாவனெல்ல பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவரை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்குரிய நடவடிக்கைகளை பொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

-athirvu.in

TAGS: