மூன்று மாதங்களுக்குமுன் பெர்சத்துவில் சேர்ந்த பந்தாய் மானிஸ் முன்னாள் பிரதிநிதி அப்துல் ரஹிம் இஸ்மாயில், நேற்று மீண்டும் அம்னோவில் சேர்ந்தார். பெர்சத்துவில் இருந்தபோது “அரசியல் ரீதியில் முடங்கிக் கிடந்தததாக” அவர் கூறினார்.
ரஹிமைத் தவிர்த்து சாபாவின் ஐந்து தொகுதிகளில் செயல்குழு உறுப்பினரில் பலர் பெர்சத்துவிலிருந்து விலகி அம்னோவுக்குத் திரும்பிச் சென்று விட்டார்களாம்.
பாப்பார் அம்னோ தலைமை கட்சிக்குத் திரும்பி வருமாறு தனக்கு அழைப்பு விடுத்ததாக ரஹிம் ஃப்ரி மலேசியா டூடே-இடம் தெரிவித்தார்.
பெர்சத்துவுக்கு உறுப்பினர் சேர்ப்பது சிரமமான பணி என்று கூறிய அவர், அம்னோ இன்னமும் அடிநிலை மக்களிடையே மிகவும் பிரபலமாக இருப்பதுதான் இதற்குக் காரணம் என்றார்.