பிரதமர் பதவிக்காலம் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பது மக்களுக்கு வெறுப்பூட்டும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
அதற்குப் பதிலாக அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய அரசாங்கம் செய்யும் முயற்சிகள் பற்றிப் பேசலாம் என்றாரவர்.
பிரதமரின் பதவிக் காலம் தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான் கட்சிகள் கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பே முடிவு செய்து விட்டன. இவ்விசயத்தில் அதுவே போதுமானது என்றாரவர்.
“கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பே ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றைப் பற்றியே திரும்பத் திரும்பப் பேசுவதில் பயனில்லை”, என்று உள்நாட்டு வாணிக, பயனீட்டாளர் விவகார அமைச்சரான சைபுடின் கூறினார்.

























