பொதுமக்களை ‘ஏமாற்றுவதை’ நிறுத்துங்கள்

பி.என் மற்றும் ஹராப்பான் ஆட்சியின் கீழ் உள்ள சுங்கவரி கட்டணங்களை ஒப்பிட்டு பொதுமக்களை ‘ஏமாற்றுவதை’ நிறுத்துமாறு நிதித்துறை அமைச்சர் லிம் குவான் எங் நஜிப்பிடம் கூறினார்.

நஜிப் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது ஆட்சியின் நிர்வாக காலத்தை விட ஹராப்பான் கீழ் மக்கள் அதிக சுங்கவரி கட்டணத்தை செலுத்துவார்கள் என்று கூறியிருந்தார்.

பி.என். முன்பு பிளஸ் ஒப்பந்தங்களை 2018 முதல் 2038 வரை நீட்டித்து, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் சுங்கவரி கட்டண விகிதங்கள் ஐந்து சதவீதம் அதிகரிக்கும் படி செய்திருந்தது.