சீனா பிரஜைகளுக்கு விசா நீட்டிப்பு இல்லை – வான் அஜிசா

ஏற்கனவே நாட்டில் உள்ள சீனா பிரஜைகளின் விசாவை அரசாங்கம் நீட்டிக்காது என்று டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

புத்ராஜெயாவில் உள்ள சுகாதார அமைச்சின் நெருக்கடி ஆயத்த மையத்திற்கு (Crisis Preparedness Response Centre) வருகை தந்த பின்னர் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது துணை பிரதமர் இதனை தெரிவித்தார். அங்கு அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் (2019-என் கோவ்) சமீபத்திய நிலைமை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.