26 சிவப்பு மண்டல மாவட்டங்கள்; லெம்பா பந்தாயில் கிட்டத்தட்ட 500 பாதிப்புகள்

நாட்டில், கோவிட்-19 சிவப்பு மண்டலமாக 26 மாவட்டங்கள் உள்ளன. லெம்பா பந்தாயில் கிட்டத்தட்ட 500 பாதிப்புகள் என எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்று தன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகங்கள் மூலம் பகிரப்பட்ட விளக்கப்படத்தின் படி, அம்மாவட்டத்தில் நேற்று மதியம் வரை 496 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய நாள் 459 பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

ஹுலு லங்காட் மாவட்டத்தில் 378 பாதிப்புகளில் இருந்து 388 பாதிப்புகளாக அதிகரித்துள்ளன. அதே நேரத்தில் பெட்டாலிங்கில் 335 பாதிப்புகளில் இருந்து 356 பாதிப்புகளாக அதிகரித்துள்ளன.

சிலாங்கூரில் இன்னும் அதிக எண்ணிக்கையிலான கோவிட்-19 நேர்மறை பாதிப்புகள் (1,236 பாதிப்புகள்) பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் ஒன்பது மாவட்டங்களில் மிகக் குறைவான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை கெடாவில் பாலிங், பாடாங் தெராப், பண்டார் பாரு மற்றும் சிக்; பகாங்கில் ரவுப்; மற்றும் சரவாக்கில் ஸ்ரீ அமான், மாத்து, முக்கா, மற்றும் லாவாஸ்.

இதற்கிடையில், உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரங்களின் படி, உலகளவில் கோவிட்-19 தொற்றுநோய்களின் பட்டியலில் மலேசியா 34-வது இடத்தில் உள்ளது. இங்கு இதுவரை 4,683 நேர்மறை பாதிப்புகள் மற்றும் 76 இறப்புகள் பதிவாகி உள்ளன என தெரிவித்துள்ளது.