இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 73 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்தார்கள். சாவு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார். தெற்கு கல்கத்தாவில் ஏ.எம்.ஆர்.ஐ. என்ற தனியார் மருத்துவமனை உள்ளது. 7 மாடி கட்டிடத்தில் இந்த மருத்துவமனை செயல்பட்டு வந்தது.
இன்று அதிகாலை 3. 30 மணியளவில் தீ தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்ததும் 24 தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையின் அடித்தளத்தில் உள்ள மின்சார பிரிவில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அது மற்ற தளங்களுக்கு பரவியதாக கூறப்படுகிறது. புகை பரவியதால் நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்தனர்.
ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் 160 பயணிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர்களில் 85 சதவீதம் வரை மீட்கப்பட்டுவிட்டதாகவும் மருத்துவமனையின் துணைத் தலைவர் உபாத்யாய் தெரிவித்தார். இந்த தீ விபத்து சம்பவம் குறித்து விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.