தடுப்பூசி செலவு : ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்க முதலாளிகளுக்கு அனுமதி இல்லை – மிட்டி

தேசியக் கோவிட் -19 நோய்த்தடுப்பு திட்டம் (பிக்), கட்டம் 4-இன் கீழ், தங்கள் ஊழியர்களுக்கானத் தடுப்பூசி மேலாண்மை செலவுகளைச் செலுத்தும் முதலாளிகள், அந்தச் செலவுகளை ஈடுகட்ட ஊழியர்களின் சம்பளத்தைக் கழிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

சர்வதேச வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு (மிட்டி), இந்த விஷயத்தை இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தது.

கட்டம் 4, கோவிட் -19 பொது-தனியார் கூட்டாண்மை தொழில்துறை நோய்த்தடுப்பு திட்டம் (பிகாஸ்) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படுகிறது, சில “முக்கியமான” பொருளாதாரத் துறைகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்குத் தளத் தடுப்பூசிகளையும் (தொழிற்சாலைகளில் தடுப்பூசிகள் போடப்படும்) இது உள்ளடக்கியுள்ளது.

முந்தைய மூன்று தேர்வு கட்டங்களில், எந்தக் கட்டணமும் இல்லை. தகுதி வாய்ந்த முதலாளிகள், தங்கள் ஊழியர்களுக்குத் தடுப்பூசி போட தடுப்பூசி மேலாண்மை செலவுகளைச் செலுத்த பிகாஸ் அனுமதிக்கிறது.

ஊழியர்கள் தானாக முன்வந்து தடுப்பூசியைப் பெறலாம் மற்றும் அதனைக் கட்டாயம் இலவசமாகப் பெற வேண்டும்.

“தனியார் பொது பயிற்சியாளர்களுக்கும், தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் தடுப்பூசி நிர்வாக மையங்களைப் பயன்படுத்துவதற்கும் செலுத்தப்படும் நிர்வாகக் கட்டணத்தை, ஊழியர்களின் சம்பளத்தில் கழிக்க முதலாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை, இதில் முழு நோய்த்தடுப்பு ஊசிக்கு முன்னர் ஊழியர்கள் அதே நிறுவனத்தில் பணியாற்றவில்லை என்றாலும்,” என்று மிட்டி கூறியுள்ளது.

மற்ற நிபந்தனைகளில், ஊழியர்கள் மைசெஜாத்தெரா மூலம் பிக்-க்குப் பதிவு செய்ய வேண்டும்.

அரசாங்கம் தனியார் துறையுடன் இணைந்து செயல்படுவதால், பிகாஸ் கட்டணம் வசூலிக்கிறது. சுகாதார அமைச்சின் அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனமும் (ஜி.எல்.சி), ப்ரொடெக்ட்ஹெல்த் சென். பெர்ஹாட்டும் சம்பந்தப்பட்டுள்ளன. இது அடுத்த புதன்கிழமை (ஜூன் 16) தொடங்குகிறது.

உற்பத்தித் துறை சாத்தியமானது

பிகாஸுக்கு எந்தத் துறைகள் தகுதியானவை என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் பெற்ற அமைச்சுகளில் மிட்டியும் ஒன்றாகும்.

பின்வரும் “முக்கியமானத் துணைப்பிரிவுகள்” உட்பட உற்பத்தித் துறையும் தகுதி பெறுகிறது என்று மிட்டி கூறியது : மின் மற்றும் மின்னணுவியல்; உணவு பதப்படுத்தும் துறை; இரும்பு மற்றும் எஃகு; மருத்துவ உபகரணங்கள்; தனிப்பட்டப் பாதுகாப்பு உபகரணம்; எண்ணெய் மற்றும் எரிவாயு; மற்றும் இரப்பர் பொருட்கள் (மருத்துவ கையுறைகள் உற்பத்தி உட்பட).

“அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகச் சங்கிலியை ஆதரிப்பதில், இந்தத் துறைகள் முக்கியம், அத்துடன் பயன்பாடுகள் மற்றும் பொது சுகாதாரம் (அமைப்புகள்) உள்ளிட்ட, முக்கியமான உள்கட்டமைப்பின் கட்டுமானம், பராமரிப்பு அடங்கும்,” என்று அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிறுவனம், கோவிட் -19 சிவப்பு மண்டலத்தில் உள்ளதா, இல்லையா என்பது உள்ளிட்ட பல காரணிகளின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று மிட்டி கூறியது.

மொத்தம் 106,591 ஊழியர்களுடன், “சுமார் 500 நிறுவனங்களிலிருந்து” பிகாஸ் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது, விண்ணப்பங்கள் இன்னும் திறக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி தவிர, ஏற்றுமதி, தளவாடங்கள் மற்றும் போக்குவரத்து, எரிசக்தி மற்றும் பயன்பாட்டுத் துறைகளுக்கும் பிகாஸ் திறந்திருப்பதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுதீன் முன்பு கூறியிருந்தார்.