பென்டோரா பேப்பர்ஸ் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்…. ரோஹித அதிரடி கருத்து

பென்டோரா பேப்பர்ஸ் தற்போது உலக தலைவர்கள் அரசியல் வாதிகள் குறித்த குற்றச்சாட்டுகளை அதிரடியாக வெளியிட்டு உலக நாடுகளை அதிர செய்துள்ளது.

இந்த விவவகரம் குறித்து துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கூறியதாவது,

இலங்கையில் யாராவதஹு சட்டவிரோதமாக பணம் வைத்திருந்தாலோ அல்லது தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலோ அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

மேலும் அந்த பென்டோரா பேப்பர்ஸில் முன்னாள் பிரதி அமைச்சரது பெயரும் இடம்பெற்றிருந்ததை குறித்து ஊடகவியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அமைச்சர்,

இன்று காலை தான் இந்த விடயம் தொடர்பில் தான் அறிந்ததாகவும்,இது குறித்து உடனே கருது தெரிவிக்க இயலாது எனவும் அவர் கூறியிருந்தார்.

(நன்றி JVP NEWS)