தென்னிலங்கை அரசியலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்

சமகால அரசாங்கத்தின் எதிராக செயற்படும் அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களை பதவியில் இருந்தும் நீக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்றன.

அரசாங்கத்தின் குறைபாடுகளை வெளிப்படையாக தெரிவித்து வந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டனர்.

இந்நிலையில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவை இன்று காலை 11.30 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளர் நேற்று அமைச்சருக்கு அறிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதென இராஜாங்க அமைச்சர் சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட பவித்திரா வன்னிஆராச்சி, நேற்றையதினம் எரிசக்தி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்..

ஏற்கனவே அரசாங்கத்தை விமர்ச்சித்த சுசில் பிரேமஜயந்த அதிரடியாக பதவியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

Tamilwin