இலங்கையில் ஒரே நாளில் பெருமளவு பணத்தொகையை அச்சிட்டுள்ள அரசாங்கம்

இலங்கை மத்திய வங்கி நேற்று மாத்திரம் 119.08 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை அதிகாரம் கொண்ட மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்ட பின்னர் அச்சிடப்பட்ட தொகை ரூ. 4,434,700 லட்சம் (ரூ. 443.47 பில்லியன்) ரூபா அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நிதியமைச்சர், நிதிச் செயலாளர், மத்திய வங்கி ஆளுநர் உட்பட பொது நிதித்துறைக்கு பொறுப்பான அனைத்து அதிகாரிகளும் இல்லையென்றாலும் அரசாங்கம் தொடர்ந்து பணத்தை அச்சடித்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனவரி 1, 2020 அன்று ஆட்சிக்கு வந்ததில் இருந்து ரூ. 1,774.77 பில்லியன் பணத்தினை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்திய அரசாங்கம் நான்கு வாரங்களுக்கு எரிபொருள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளை கடனில் வழங்கியுள்ளது, ஆனால் அடுத்த வாரத்திற்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பூர்வாங்க ஒப்பந்தங்கள் எட்டப்படாவிட்டால் நாட்டில் எரிபொருள் அல்லது மின்சாரம் தட்டுப்பாட்டினை தவிர்க்க முடியாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

Tamilwin