விடுதலைப்புலிகளே சிறந்த பொருளாதார திட்டத்தை பேணியவர்கள்! நாடாளுமன்றில் சிறிதரன் பகிரங்கம்

விடுதலைப் புலிகளின் சிறந்த பொருளாதார திட்டம் தான் யுத்தகாலத்தில் தமிழர்களை பாதுகாத்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் வடக்கில் வாழும் மக்களும் இந்த பொருளாதார வீழ்ச்சியால் பாதிப்பை சந்திப்பார்கள் எனவும் மலையகத்தில் வாழும் மக்களே அதிக நெருக்கடிக்கு உள்ளாவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் பொருளாதார நடவடிக்கைகள்

விடுதலைப்புலிகளின் தலைவர் இருந்த காலத்தில் அங்கு மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக அந்த மக்கள் அந்த மண்ணில் உற்பத்திகளை மேற்கொண்டனர் அப்போது 14 ரூபாவுக்கு அரிசியை வாங்கினர் எனவும் சுட்டிக் காட்டினார்.

இங்குள்ள தலைவர்கள் வன்னிப்பகுதிக்கு பொருளாதார தடைகளை விதித்து இருந்தபோதும் அந்த மண்ணில் எவரும் பட்டினியாக சாகவில்லை எனவும் குறிப்பிட்ட அவர் எறிகணைகளும் குண்டுகளாலும் மாறி மாறி வந்த அரசாங்கங்களினாலுமே அங்கிருந்த மக்கள் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்தார்.

 

 

IBC Tamil