இலங்கை திவாலடைந்ததை மறைத்த கோட்டாபய அரசாங்கம்! அம்பலப்படுத்திய ரணில்

நாட்டில் நிலவி வந்த நிதி நெருக்கடி நிலைமைகளை கோட்டாபய ராயபக்சவின் அரசாங்கம் மறைத்து விட்டது என்று பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை எதிர்நோக்கி வந்த, எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடி மற்றும் நிதி நெருக்கடி நிலைமைகளை மக்களிடம் கோட்டாபய அரசாங்கம் மறைத்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீரான பொருளாதார திட்டம்

நாடு திவால் அடைந்துவிட்டது என்பதையும் ,சர்வதேச நாணய நிதியத்தின் உதவி தேவை என்பதனையும் வெளிப்படுத்த தவறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஆண்டு நிறைவிற்குள் பொருளாதாரத்தை சீராக கொண்டுவரக்கூடிய திட்டமொன்று வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

ibc