மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வரும் நிலையில் இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கைக்கு வழங்கப்படவுள்ள நிதியுதவி
உணவு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்காக உலக உணவுத் திட்டம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளன.
இதன்போது போசாக்கு உணவுக்காக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் மூலம் 0.5 மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கப்படவுள்ளன.
ஜப்பானிய அரசாங்கம்
இத்தனையடுத்து தற்போதைய நிலைமைக்கு பதிலளிக்கும் வகையில் இது ஜப்பானின், இலங்கைக்கான மொத்த உதவி தொகை 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில், ஜப்பானுடன் நீண்டகால மற்றும் இணக்கமான உறவுகளை கொண்டுள்ள இலங்கை மக்கள் எதிர்நோக்கும் கஷ்டங்களை போக்குவதற்கு இந்த உதவி பங்களிக்கும் என நம்புவதாக ஜப்பானிய அரசாங்கம் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
-tw