இலங்கை நாடாளுமன்றம் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஜனவரி 27 நள்ளிரவு தொடங்கி அது நடப்புக்கு வந்தது. எனினும் அதற்கான தெளிவான காரணத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க அலுவலகம் அறிவிக்கவில்லை. எனினும் புதிய நீண்டகால கொள்கைகளை அறிவிப்பதற்காக அவ்வாறு செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
பல மாதங்களாக இலங்கையில் பொருளாதார நெருக்கடி தொடர்கிறது. புதிய கொள்கைகள் அதற்கான தீர்வுகளையும் கொண்டிருக்கும் என்று நம்பப்படுகிறது.
புதிய கொள்கைகள் 2048ஆம் ஆண்டு வரை செயல்படுத்தப்படும். அந்த ஆண்டில்தான் இலங்கை அதன் சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்.
திரு.விக்ரமசிங்க சிறுபான்மை தமிழ் மக்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது குறித்தும் அறிவிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அதிகார பலத்தைக் காட்டவே அதிபர் நாடாளுமன்றத்தை நிறுத்தி வைத்திருப்பதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.