இலங்கை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் – கனடா வலியுறத்தல்

இலங்கை பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும் என கனடா பரிந்துரைசெய்துள்ளது ஐநாஅமர்வில் கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

அரசசார்பற்ற அமைப்புகளின்சுதந்திரத்தை உறுதி செய்யுமாறும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்யுமாறும் கனடா வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக ஜெனிவாவில் இன்று இடம்பெற்றுவரும் 42வது அமர்வில் உலகளாவிய காலமுறை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு பரிசீலனை செய்ய ஆரம்பித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு ஐ.நா.சபையின் பொதுச் சபையால் நிறுவப்பட்ட உலகளாவிய காலமுறை தொடர்பான மதிப்பாய்வு குழுவினால் ஒவ்வொரு உறுப்பு நாடும் நான்கரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது.

2008 ல் முதல் தடவையாகவும் 2012 ல் இரண்டாவது தடவையாகவும் 2017 ல் மூன்றாவது தடவையாகவும் இலங்கை உட்பட அனைத்து உறுப்பு நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பாக மதிப்பாய்வு செய்யப்பட்டன.

இந்நிலையில் நான்காவது சுழற்சியின் கீழ் 2022 டிசம்பர் 22 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை மற்றும் 2017 நவம்பரில் உலகளாவிய காலமுறை தொடர்பான குழுவால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று ஆராயப்படவுள்ளது.

 

 

 

-if