சுசந்திகா இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமனம்

ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருமதி சுசந்திகா ஜயசிங்க இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இலங்கை மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்றைய தினம் முதல் அந்தப் பதவியில் பணியாற்றுவதாகவும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

-jv