இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக சீனா உறுதி

கடன் பாதிப்புகளை நிவர்த்தி செய்வதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனாவின் பிரதி நிதியமைச்சர் Wang Dongwei தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை வோஷிங்டனில் சந்தித்த போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இலங்கை மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை துணை அமைச்சர் உறுதியளித்தார் என சேமசிங்க ட்வீட் செய்துள்ளார்.

உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் 2023 வசந்த கால கூட்டத்துக்கு புறம்பாக இந்த சந்திப்பு நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

-tw