நீதிமன்றை அவமரியாதை செய்வதனை தடுக்கும் புதிய சட்டமூலத்திற்கு அமைச்சரவை அனுமதி

நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளை அவமரியாதை செய்வதனை தடுக்கும் புதிய சட்டமூலமொன்றுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

இந்த உத்தேச சட்டமூலத்தை வர்த்தமானியில் அறிவிக்கவும், பின்னர் நாடாளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம், சிறைச்சாலைகள் மற்றும் அரசியல் அமைப்பு திருத்த அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அனுமதி கிடைத்துள்ளது.

 

 

-tw