வாக்குகள் வேண்டுமா, சட்ட பூர்வ பிரகடணத்தில் கையெழுத்திடுங்கள் – தோட்டமக்கள் கோரிக்கை

“உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐந்து தோட்டங்களின்  தொழிலாளர்கள் உள்ளனர். எங்களிடம் 500-க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை நாங்கள் பெற்றிருக்கிறோம்” என்று கூறும் தோட்ட மக்கள் ஒரு புதிய நிபந்தனையை முன் வைத்தனர்..

தோட்ட தொழிலாளர்களின் வீடமைப்பு பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக பல அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.ஆனால் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், இப்போது இடைத்தேர்தல் நெருங்கிவிட்டது. எங்கள் வாக்குகள் வேண்டுமென்றால் போட்டியிடும் வேட்பாளர் முதலில் அனைத்தையும் நிறைவேற்ற பங்காற்றுவேன் என்ற SD சட்டபூர்வ சான்றிதழில் கையெழுத்திட வேண்டும் என 5 தோட்டப்பாட்டாளிகள் இன்று கோரிக்கையை முன்வைத்தனர்.

“இனியும் நாங்கள் ஏமாற தயாராக இல்லை”, என்று தோட்ட தொழிலாளர்கள் நடவடிக்கை குழுவின் தலைவர் வாசுதேவன் ராஜமாணிக்கம் தெரிவித்தார்.

நைகல் கார்ட்டன், புக்கிட் தாகார், லாடாங் மேரி, லாடாங் மிஞ்சாங்,லாடாங் சுங்கை திங்கி தோட்டப்ப பாட்டாளிகள் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நடைபெற்ற சிறப்பு பத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர்கள் இந்த கோரிக்கையை முன் வைத்த போது பிஎஸ்எம் கட்சியின் துணைத் தலைவர் அருட்செல்வம் உடன் இருந்தார்.

(நன்றி – மன்னன் தந்தி)