சமூக வருகை அனுமதிச் சீட்டை தவறாகப் பயன்படுத்தியதற்காக 55,000 வெளிநாட்டினர் மீது நடவடிக்கை

2025 ஆம் ஆண்டு முதல் ஜனவரி நடுப்பகுதி வரை மலேசியாவில் பணிபுரிய தங்கள் சமூக வருகை அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்திய கிட்டத்தட்ட 55,000 வெளிநாட்டினர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.

இந்த புள்ளிவிவரங்களை உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுதியோன் இஸ்மாயில் இன்று அமைச்சரவைக் கூட்டத்தில் வெளியிட்டதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாமி பட்சில் தெரிவித்தார். மொத்த எண்ணிக்கையில், கடந்த ஆண்டு 51,100 வழக்குகளும், ஜனவரி நடுப்பகுதி வரை 3,691 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

தங்கள் வருகை அனுமதிச் சீட்டுகளை தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடுமையான அமலாக்க நடவடிக்கை எடுக்க பிரதமர் அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளதாக பாமி கூறினார்.

“அவர்கள் வருகைக்காகவோ அல்லது பயணம் செய்வதற்காகவோ சமூக காரணங்களுக்காக நுழைந்தாலும், வேலைவாய்ப்புக்கான கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன” என்று அவர் இன்று தனது வாராந்திர செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

 

 

-fmt