“ஐந்து நாள் காவலுக்குப் பிறகு, தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் இன்று விடுவிக்கப்பட்டனர்.”
ரிம 230 கோடி நிதி முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, 18 ஆடம்பர வாகனங்கள் மற்றும் ரிம 18.3 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள அசையா சொத்துக்களை ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) பறிமுதல் செய்துள்ளது.
230 மில்லியன் ரிங்கிட் நிதி முறைகேடு தொடர்பான விசாரணைக்கு உதவ விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஒரு அரசு சாரா நிறுவனத்தின் (NGO) துணைத் தலைவர் மற்றும் ஒரு நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோர் சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (MACC) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 25 அன்று ஐந்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்ட அவர்களது விளக்கமறியல் இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து, இரு சந்தேக நபர்களும் இன்று விடுவிக்கப்பட்டதாக ஆதாரங்களை மேற்கோள் காட்டி சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது சிலாங்கூர் ஊழல் தடுப்பு ஆணையத்தின் இயக்குனர் அஸ்வான் ரசாலி உறுதிப்படுத்தினார்.
அந்த அரசு சாரா நிறுவனத்தின் துணைத் தலைவர், 230மில்லியன் ரிங்கிட் நிதியை தனிப்பட்ட மற்றும் முதலீட்டு நோக்கங்களுக்காக தனது நிறுவனத்தின் வங்கி கணக்குகளுக்கு மாற்றியதாக நம்பப்படுகிறது.
இந்த விசாரணை ஒரு பகுதியாக, 18 சொகுசு வாகனங்கள் மற்றும் 18.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அசையா சொத்துக்களை (ஏழு குடியிருப்பு சொத்துக்கள், மூன்று அலுவலக அலகுகள் மற்றும் நான்கு நிலப்பகுதிகள்) ஊழல் தடுப்பு ஆணையம் பறிமுதல் செய்துள்ளது. மேலும், மொத்தம் 120 மில்லியன் ரிங்கிட் வைப்புத்தொகை கொண்ட 33 வங்கி கணக்குகளையும் அந்த நிறுவனம் முடக்கியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட மூன்று உறுப்பினர்களை இடைநீக்கம் செய்துள்ளதாக பெர்துபுஹான் இக்ராம் மலேசியா (Ikram) முன்னதாக தெரிவித்தது. இது தனிப்பட்ட நபர்களின் செயல் என்றும், இஸ்லாமிய பிரச்சாரம், கல்வி மற்றும் நலத்திட்டங்களில் ஈடுபட்டுள்ள இக்ராம் அமைப்புடன் இதற்கு நேரடித் தொடர்பு இல்லை என்றும் அது வலியுறுத்தியுள்ளது.























