“நீர்விழாவின் போது கத்தியை காட்டிய பெண் பஹாகியா மருத்துவமனைக்கு (Hospital Bahagia) அனுப்பப்பட்டார்.”

27 வயதான ஷானன் ஆன்-ஓய் (Shannon Anne-Ooi), பொது இடத்தில் சட்டவிரோத நோக்கத்திற்காகத் தாக்குதல் ஆயுதத்தை வைத்திருந்ததாக இன்று காலை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.

சனி இரவு நடைபெற்ற ‘ரெயின் ரேவ்’ (Rain Rave) நீர் இசை விழாவின் போது, கத்தியை எடுத்து மிரட்டிய ஒரு பெண்ணிடமிருந்து பொதுமக்கள் கத்தியைப் பிடுங்கி அவரை அடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற ரெயின் ரேவ் நீர் இசை விழாவில் கத்தியைக் காட்டி மிரட்டிய பெண், 30 நாட்கள் மனநல பரிசோதனைக்காக உலு கிந்தாவில் உள்ள பஹாகியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஷானன் அன்-ஓயி (வயது 27) இன்று காலை, பொதுவிடத்தில் சட்டவிரோத நோக்கத்திற்காக ஒரு தாக்குதல் ஆயுதத்தை எடுத்துச் சென்றதாக, 1958 ஆம் ஆண்டின் Corrosive and Explosive Substances and Offensive Weapons Act இன் பிரிவு 6(1) கீழ் குற்றம் சாட்டப்பட்டார்.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வழங்கப்படலாம்.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதால், அவரை மனநல பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டதாக டாங் வாங்கி  தலைமை அதிகாரி சசாலி ஆடம் தெரிவித்தார்.

இந்த வழக்கு ஜூன் 4-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் என அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு நடைபெற்ற இசை விழாவின் போது, கத்தியை எடுத்த பெண்ணிடமிருந்து பொதுமக்கள் ஆயுதத்தைப் பறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.