இந்தியர்கள் பகுதி-பகுதியாக வழங்கப்படும் தீர்வுகள் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

உங்கள் கருத்து: “தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவது இந்தியர்களை மேம்படுத்த உதவும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.’

பிரதமர் இந்தியர்களிடம் சொல்கிறார்: என்னுடன் நடந்து வாருங்கள். நான் என் வாக்குறுதிகளைக் காப்பாற்றியுள்ளேன்

புத்திசாலி வாக்காளர்: பிஎன் -னுக்கு வாக்களிப்பது பெரிய மோசடிகள், ஊழல்கள், அனைவரும் அனுபவிக்கும் வகையில் வளப்பத்தைப் பெருக்கும் திட்டங்களுக்கு பயன்பட்டிருக்க வேண்டிய பொது நிதிகளைத் திருடியது ஆகியவற்றை ஏற்றுக் கொண்டு அங்கீகரிப்பதற்கு ஒப்பாகும்.

அதற்கு ‘ஆம்’ எனச் சொல்வது உண்மையில் தார்மீக ரீதியில் தவறாகும். பிஎன் கட்சிகள் இழைத்துள்ள அநீதிகளையும் செய்துள்ள புறக்கணிப்பையும் நீங்கள் ஒப்புக் கொள்வதாகப் பொருள்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக நியாயமற்ற அரசாங்கக் கொள்கைகளையும் சக குடி மக்கள் நடத்தப்பட்ட விதத்தையும் நீங்கள் அங்கீகரிப்பதாகவும் கருதப்படும்.

50 ஆண்டு கால ஆட்சிக்குப் பின்னர் நாம் அழுகிப் போன தலைமைத்துவத்தைப் பெற்றுள்ளோம். பண்பாடுகளும் தார்மீகப் பண்புகளும் சீரழிந்துள்ளன. தரம் குறைந்த கல்வி முறைகள் ஆகியவை நமக்குப் பெருமையத் தரவில்லை. சமூகம் பிளவுபட்டுள்ளது.  ஒன்றையொன்று சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறது.

இதனைத் தான் நீங்கள் முன்னேற்றம் என்கின்றீர்களா ? நாம் இந்த வழியில் சென்றால் நாம் நரகத்துக்குள் தான் செல்வோம்.

ஜேம்ஸ்1067: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அவர்களே நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் நீங்கள் உங்கள் பணிகளை வெளிப்படையாகவும் கௌரவமாகவும் செய்தால் போதும். மக்கள் பணத்தில் இங்கு சில ஆயிரங்கள், அங்கு சில மில்லியன்களைச் செலவு செய்வது பிரச்னைகளைத் தீர்க்கப் போவதில்லை.

உங்கள் நண்பர்களுக்கும் சேவகர்களுக்கும் அரசியல் ஆதரவாளர்களுக்கும் நீங்கள் விநியோகம் செய்த நூற்றுக்கணக்கான பில்லியன் ரிங்கிட் இன்னும் மக்கள் மனதில் பசுமையாக இருக்கிறது.

ஊழலைக் குறைப்பதற்கு உண்மையான முயற்சிகளை நீங்கள் எடுத்து, நீதித் துறைக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்துக்கும் சுதந்திரம் கொடுத்து, உறிஞ்சப்பட்ட பணத்தை மீட்பதற்குத் தீவிரமான முயற்சி எடுத்தால் மட்டுமே மக்கள் உங்கள் வார்த்தைகளை நம்பத் தொடங்குவர்.

பெர்ட்: மக்களுக்குப் பள்ளிக்கூடங்களைக் கட்டுவது அது தமிழ்ப் பள்ளியாக இருந்தாலும் சீனப் பள்ளியாக இருந்தாலும் அது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அரசாங்கம் பிஎன் னாக இருந்தாலும் பக்காத்தானாக இருந்தாலும் அதைத் தான் செய்ய வேண்டும்.

வாக்குகளை வாங்குவது “நான் உன் முதுகை சொறிந்து விடுகிறேன். நீங்கள் என் முதுகை சொறிந்து விடுங்கள்” என்பதற்கு ஒப்பாகும். தேர்தல் முடிந்ததும் எல்லாம் மறக்கப்பட்டு விடும். இது தான் வழக்கமாக நடக்கிறது. பின்னால் குறை சொல்ல வேண்டாம்.

விவேகமாக வாக்களியுங்கள். அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் சொல்வதைப் போல உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

அனைவருக்கும் நியாயம்: வெறும் குப்பை. தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவது இந்தியர்களை மேம்படுத்த உதவப் போவதில்லை. உயர் கல்வி உபகாரச் சம்பளங்களைப் பற்றி என்ன சொல்வது ?

எல்லாப் பாடங்களிலும் ஏ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உயர் கல்விக்கு எந்த உதவியும் கிடைப்பது இல்லை.

என் உறவினருடைய புதல்வி எல்லாப் பாடங்களிலும் ஏ பெற்றார். மருத்துவக் கல்வி பயிலுவதற்கான அவருடைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. முன்னாள் அரசு ஊழியரான அவரது தந்தை இப்போது தமது சொந்தச் செலவில் தமது புதல்வியை இந்தோனிசியாவில் மருத்துவம் படிக்க வைத்துள்ளார். இந்தியர்களை முட்டாளாக்க நினைக்கும் நஜிப் வெட்கப்பட வேண்டும்.

தமிழ்ப் பள்ளிக் கூடங்களைக் கட்டுவது இந்தியர்களை மேம்படுத்த உதவும் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ? அவர்கள் நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டு வந்துள்ளனர்.

லயன் கிங்: நஜிப் அவர்களே தயவு செய்து தமிழ்ப் பள்ளிகளுக்கான 440 மில்லியன் ரிங்கிட் பற்றிப் பேச வேண்டாம். கல்வி என்பது ஒவ்வொருவருடைய உரிமை ஆகும். மற்ற குடி மக்களைப் போன்று மலேசிய இந்தியர்களும் வரிகளைச் செலுத்துகின்றனர்.

கல்வி, வர்த்தக வாய்ப்புக்கள், நிதி உதவி, அரசாங்கத்திலும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலும்  வேலைகள் என வரும் போது மலேசிய இந்தியர்கள் ஒரங்கட்டப்பட்டுகின்றனர்.

எங்களுக்கும் அதே வாய்ப்பைக் கொடுங்கள். நாங்கள் பணத்துக்கு உங்களிடம் கை ஏந்த வில்லை.

இந்தியர்கள் ஏன் பல்கலைக் கழகப் பிவுகளுக்குத் தலைவர்களாக, தலைமை இயக்குநர்களாக, தலைமைப் போலீஸ் அதிகாரிகளாக பள்ளிக்கூடத் தலைமையாசிரியர்களாக நியமிக்கப்படுவதில்லை ”
எங்களுக்குத் திறமை இல்லையா ?

நீங்கள் எங்களிடம் ஆதரவு கேட்கும் முன்னர் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.

நியாயமானவன்: நான் ஒப்புக் கொள்கிறேன். பிஎன் எப்போதும் தன் வாக்குறுதிகளைக் காப்பாற்றி வந்துள்ளது. அப்படி இருக்கும் போது 50 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஏன் இந்திய சமூகம் இன்னும் ஏன் ஒரங்கட்டப்படுகிறது.

என்எக்ஸ்: நஜிப் அ;;அது ஆ ஜிப் நோர் என எப்படி நீங்கள் உங்களை அழைத்துக் கொண்டாலும் நான் வரி கொடுக்கும் ஒர் இந்தியன். நீங்கள் எனக்குச் சேவகர். மலேசியர்களாக இருக்கும் வரையில் சரும நிறம் எப்படி இருந்தாலும் மக்களுடைய தேவைகளை கவனித்துக் கொள்ளுமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

மக்களுடைய அவாக்களைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. அந்தக் காரணத்துக்காகத் தான் நாங்கள் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம்.

எல்லாவாற்றையும் விட அல்தான்துயா ஷாரிபு ஏன் கொலை செய்யப்பட்டார் என்பதையும் அவருடைய குடிநுழைவுப் பதிவுகள் எப்படிக் காணாமல் போயின என்பதையும்  நாங்கள் அறிய விரும்புகிறோம். நாங்கள் உங்களுக்குக் கடன்பட்டிருக்கவில்லை.

நான் மலேசியன்: என் சக மலேசியர்களே நீங்கள் மலாய்க்காரர்களாக, சீனர்களாக, இந்தியர்களாக, கடாஸான்களாக, டுசுன்களாக அல்லது எதுவாக இருந்தாலும் சரி வரும் தேர்தலுக்காக வாக்காளர்களைக் கவர பிஎன் செய்யும் முயற்சிகளில் ஏமாந்து விட வேண்டாம்.

அரசமைப்பின் கீழ் நமக்கு எல்லா உரிமைகளையும் பெறத் தகுதி உண்டு. ஆனால் அந்த வீணாய்ப் போன மசீச, மஇகா, கெரக்கான், பிபிபி ஆகியவை நமது எல்லா உரிமைகளையும் விட்டுக் கொடுத்து விட்டன. நான் இரண்டாம் தர குடி மக்கள் அல்ல.

வாக்குறுதிகள் என்பதே இருக்கக் கூடாது. நமக்குச் சேவை செய்ய நாம் அரசாங்கத்தைத் தேர்வு செய்கிறோம். நாம் வரி செலுத்துகிறோம். ஊழியர் சேம நிதிக்கு சந்தா கட்டுகிறோம். ஆனால் பிஎன் நம்மை அடிமைகள் என எண்ணுகிறது.

நாங்கள் தூய்மையான, திறமையான, வெளிப்படையான அரசாங்கத்தை நாடுகிறோம். பிஎன் அதனைச் செய்ய வேண்டும். தகுதியை அடிப்படையாகக் கொண்டு நாட்டை அது நிர்வாகம் செய்ய வேண்டும்.

சாடிரா: நஜிப், நாங்கள் உங்களுடன் நடக்க வேண்டும்.  நாங்கள் கடந்த 50 ஆண்டுகளாக அதனை செய்து வந்தோம். எங்கள் நிலை என்னவானது ? இரண்டாம் தர குடிமக்களாக்கப் பட்டோம்.

நாங்கள் சம-பங்காளைகளாக நடக்க விரும்புகிறோம். இரண்டாம் தரக் குடிமக்களாக அல்ல. முடிவு எடுப்பதில் எங்களுக்கு சமமான பங்கை நாங்கள் நாடுகிறோம் என்பதே அதன் பொருள். அம்னோ எங்களுக்கு கொடுப்பதை கேட்டுக் கொள்வதற்கு அல்ல. நாட்டு விவகாரங்களில்- வெளியுறவுகளிலிருந்து கல்வி வரை  நாங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என விரும்புகிறோம்.

அடையாளம் இல்லாதவன்_40f4: நஜிப் சொல்லும் 440 மில்லியன் ரிங்கிட்டை நம்ப முடியவில்லை. ‘ஒராங் இந்தியா’ வுக்கு அந்தப் பணத்தை இனவாத அம்னோ அரசாங்கம் எந்த வழியிலும் செலவு செய்யப் போவதில்லை.

சம உரிமைகளைக் கொண்ட மலேசியர்களாக நாங்கள் நடத்தப்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். இன ஒதுக்கல் நாட்டில் நிலவுவதைப் போன்று ஒரங்கட்டப்பட்டவர்களாக அல்ல.

நீலகிரி: இந்தியர்கள், தங்கள் நம்பிக்கையை நஜிப்புக்குக் கொடுப்பதற்கு முன்னர் மலாய்ப் பள்ளிக்கூடங்களுக்கு அவர் எவ்வளவு கொடுத்தார் என்பதை அறிவிக்க வேண்டும் எனக் கேட்க வேண்டும்.

மாற்றம்: 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை முறையே 31 பில்லியன் ரிங்கிட், 30 பில்லியன் ரிங்கிட், 29.3 பில்லியன் ரிங்கிட் நாடு முழுவதும் உள்ள தொடக்க, இடைநிலைப் பள்ளிகளை மேம்படுத்துவதற்குக் கல்வி அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டது.

அந்த மொத்த 90.3 பில்லியன் ரிங்கிட்டில் மிகவும் தாரளமாக 0.49 விழுக்காட்டை ஒதுக்கியதின் மூலம் தாம் தமது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதால் அரசாங்கத்தில் தொடர்ந்து பிஎன் -னை வைத்திருக்க  இந்திய சமூகம் தொடர்ந்து தமக்கு ஆதரவளிக்க வேண்டும் என நஜிப் சொல்கிறார்.

TAGS: