இந்தியாவின் அனைத்துக்கட்சி குழு இலங்கை செல்லவுள்ளது

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் அனைத்துக்கட்சி குழு ஒன்று இலங்கை செல்லவுள்ளது. இத்தகவலை சுஷ்மா சுவராஜ் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழர் பிரச்னை உலகம் முழுவதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது என நிருபர்களிடம் பேசிய சுஷ்மா, நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் குரல் கொடுத்து வந்ததாக தெரிவித்தார்.

இந்தப் பிரச்னை தொடர்பாக தனது தலைமையில் அனைத்துக் கட்சி குழு ஒன்று இலங்கை செல்ல இருப்பதாகவும், அது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு வருவதாகவும் சுஷ்மா சுவராஜ் குறிப்பிட்டார்.

TAGS: