உங்கள் கருத்து: ‘ஹங் சம்சிங்’ மகாதீர் காலத்திலேயே தொடங்கி விட்டது

“இது போன்ற “சம்சிங்” பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது மலாய்க்காரர்களிடம் மட்டும் இல்லை என தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் சொல்கிறார்.”

“அப்போது ஹங் துவா, இப்போது ஹங் சம்சிங்'”

Anonyxyz: ‘இது போன்ற “சம்சிங்” பாணியிலான பண்பாடு ஒரே நாளில் உருவாகவில்லை. அது மலாய்க்காரர்களிடம் மட்டும் இல்லை என தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் சொல்கிறார்’
 
கடந்த 20 ஆண்டுகளாக அது வலுவடைந்து வருகிறது. 50 ஆண்டுகளாக அல்ல. அந்த ‘கிறுக்கு டாக்டர்’ நாட்டை ஆட்சி புரியத் தொடங்கியதிலிருந்து அது வளர்ந்து வருகிறது.

அந்தப் பண்பாடு காணப்படுவது மட்டுமே பிரச்னை அல்ல. அதனைத் திருத்த முடியும் என்ற சூழ்நிலை இருந்த போதிலும் அவ்வாறு செய்யப்படாததுதான் வருத்தமளிக்கிறது.

அவருடைய கெத்துவானான் என்ற மேலாண்மை சுலோகத்தினால் கவரப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான ஆதரவாளர்கள் இன்னும் அவரைப் போற்றி வருகின்றனர். உண்மையில் அவர்களுக்கு அந்த சுலோகத்தினால் எந்த நன்மையும் இல்லை. எல்லா வெகுமதிகளும் எல்லா இனங்களையும் சேர்ந்த ஊழல் நிறைந்த பணக்கார பிஎன் புத்ராக்களுக்குப் போய்ச் சேருவது அவர்களுடைய கண்களுக்குத் தெரியவே இல்லை.

இன்று அந்தக் கும்பல் தேர்வு செய்யப்பட்ட சில தரப்பினருக்கு உதவி செய்கிறது. கால ஒட்டத்தில் வற்றாத தங்களது ஊழல் பணத்தாசைக்கு அந்தத் தரப்பினர் பலி கொடுக்கப்பட்டு விடுவர்.

மலாய்க்காரர்களுக்கு அந்த ‘கிறுக்கு டாக்டர்’ கொடுத்த ‘ஹெரோயினை’ சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள் விழுங்கி விடுவர். மறு வாழ்வு பெற்ற மலாய்க்காரர்கள் எப்போது அந்த “போதையிலிருந்து” விடுபடுவர்? நாம் எப்போது காப்பாற்றப்படுவோம்?

அடையாளம் இல்லாதவன்:  #63753867: விழித்துக் கொண்ட ஏ சமாட் சைட் சொல்கிறார் ‘கடந்த 20 ஆண்டுகளாக தார்மீகப் பண்புகள் சீரழிந்து வருகின்றன.’

திருத்தம்: “கடந்த 26 ஆண்டுகளாக தார்மீகப் பண்புகள் சீரழிந்து வருகின்றன.

விழித்துக் கொண்டவன்: உண்மையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த நாட்டில் தார்மீகப் பண்புகள் சீரழிந்து வருகின்றன. பலருக்கு எது சரி எது தவறு என்பது கூடத் தெரியவில்லை.

இஸ்லாம், கிறிஸ்துவம், பௌத்தம், இந்து, கன்பூசியஸ் போன்ற உலகின் தலையாய சமயங்கள் இங்கு பின்பற்றப்பட்ட போதிலும் ஆளும் கட்சிகள் சமய நெறிகளுக்கு மாறான பண்புகளை வலியுறுத்தி வந்துள்ளன.

இனவாதம், இன மேலாண்மை, பணத்தைச் சேர்ப்பதற்கு சிறப்புச் சலுகைகள், வெறுப்புணர்வைத் தூண்டுவது, அவதூறு சொல்வது ஆகியவற்றை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

அண்மைய காலமாக வன்முறைகளுக்கு ஊக்கமூட்டப்படுகின்றன. நாம் அதனைக் கண்டிக்க வேண்டும். தார்மீகப் பண்புகள் குறைவதை தடுக்க வேண்டும். இல்லை என்றால் நம் நாடு வீழ்ச்சி அடையும்.

விசுவாசமான மலேசியன்: பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன், நாகரீகமற்ற முறையில் ‘சம்சிங்’ பாணியில் மிரட்டப்படுவது மீது அர்த்தமுள்ள விளக்கத்தை தந்த பாக் சமாட்டுக்கு நன்றி.

உண்மையில் அம்னோ புத்ராக்களுக்கு அது பெருத்த அவமானமாகும். அம்பிகா வீட்டுக்கு வெளியிலும் மெர்லிமாவிலும் மன்னர்களைப் போன்று உலா வந்த அவர்கள் பெரிய போக்கிரிகள்.

சுவாத்: பாக் சமாட் நமது வரிப்பணத்தைக் கொண்டு வேலைக்கு அமர்த்தியுள்ள பல அமைச்சர்களைக் காட்டிலும் தெளிவாக பார்க்கிறார்.

குட்டி அரக்கன்: மக்கள் முட்டாள்கள் அல்ல. ‘ஹங் சம்சிங்’ போக்கை கட்டவிழ்த்து விட்டு உண்மையான ஜனநாயகத்தை மிரட்டும் தங்கள் நடவடிக்கை குறித்து பிஎன்/அம்னோ தலைவர்கள் வெட்கப்பட வேண்டும்.

அவை இது போன்ற ‘ஹங் சம்சிங்’குகளை தொடர்ந்து வேலைக்கு அமர்த்தி வந்தால் அடுத்த 100 ஆண்டுகளில் கூட நாம் வளர்ச்சி அடைந்த, உயர்ந்த வருமானத்தைக் கொண்ட நாடாக மாறவே முடியாது.

மே: தாங்கள் எல்லாவற்றையும் இழக்கப் போகிறோம் என்னும் உணர்வு தலைதூக்கும் போது ஒரு சிலர் இனவாதத்தை அவிழ்த்து விடுகின்றனர். அதனை முறியடிப்பதற்கு மலேசியர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டும்.

விவேகமான வாக்காளர்கள்: முன்பு இதே அம்னோ/பெர்க்காசா ஆதரவு குண்டர் கும்பல்கள் மாட்டுத் தலை ஊர்வலத்தை நடத்தின. இப்போது மாட்டிறைச்சி பேர்கர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளன.

மஇகா, பிபிபி, எஸ் நல்ல கருப்பனுடைய MIUP, ஹிண்ட்ராப் ஆகியவை அவமானத்தைத் தருகின்ற நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டு எலிகளைப் போல பதுங்கிக் கொண்டு மௌனமாக இருக்கின்றன.

அடுத்த பொதுத் தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் போது இந்திய வாக்காளர்கள் இதனை நினைவில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் இன்னும் அம்னோ/பிஎன்-னுக்கு வாக்களித்தால் அம்னோ/பிஎன்/பெர்க்காசா கோமாளிகள் மென்மேலும் உங்களை அவமானப்படுத்துவர்.

பெர்ட் தான்: இந்த ‘சம்சிங்’ சம்பவங்கள் திடீரென முளைக்கவில்லை. நாடு முழுவதும் இத்தகைய மிரட்டல் சம்பவங்கள் தொடருவதால் ‘பிஎன் அரசாங்க ஆதரவு பெற்ற’ விஷயமாகவே அவை இருக்க வேண்டும்.

வெட்கத்தைக் கொடுக்கும் அந்தச் சம்பவங்கள் மீது பிரதமரும் துணைப் பிரதமரும் ஆழ்ந்த மௌனம் சாதிப்பது பலர் நம்புவதை உண்மையாக்குகிறது.

அத்தகைய வன்முறைகளை பிஎன் அரசு அங்கீகரித்தல் அது எப்படி மக்கள் உள்ளங்களைக் கவரப் போகிறது ?

அரசியல் போரை நடத்துவதற்கு வேறு வழி இல்லையா ? மிரட்டுவதிலும் இன, சமய உணர்வுகளைத் தூண்டி விட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதிலும் அது இறங்க வேண்டுமா ?

ஹலோ பிஎன், இது 21வது நூற்றாண்டு. தொடர்புகள் நமது கைவிரல் நுனியில். அரசாங்கம் கூறும் ஒவ்வொரு பொய்யும் அடுத்த நொடியே இணைய மக்களுக்குத் தெரிந்து விடும். மக்கள் இப்போது அச்சமடைவதே இல்லை.

Telestai!: அடுத்த பொதுத் தேர்தல் நெருங்க நெருங்க அம்னோவின் உண்மையான நிறம் வெளிப்படுகிறது. எதிர்க்கட்சிகள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். அவற்றுக்கு எதுவும் எளிதாக இருக்காது.

முதுமொழி ஒன்று உண்டு. “மரணத்தைக் காட்டிலும் மரண பயமே கொடுமையானது.”

 

TAGS: