சிலாங்கூர் மாநில டிஎபி செயலவை உறுப்பினர் வி. கணபதி ராவ், தம்மையும் தமது சகோதரரையும் கடந்த வாரம் தாக்கிய நபர்கள் பிகேஆர் உறுப்பினர்கள் என்று மஇகா இளைஞர் பிரிவு கூறியிருப்பதை நிராகரித்ததோடு அது முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள் என்றார்.
“இதெல்லாம் முட்டாள்தனமான குற்றச்சாட்டுகள்” என்று அவர் மலேசியாகினியிடம் இன்று கூறினார்.
“நான் இண்ட்ராப் 2.0 பேரணியை ஏற்பாடு செய்தது ஒருவருக்கு பிடிக்கவில்லை. அதற்காக அவர்கள் என்னைத் தாக்கினர். அவர்கள் அந்த மனிதரை மகிழ்ச்சிபடுத்த விரும்பினர்.
“அது பாக்கத்தான்காரர்களாக இருக்க முடியாது”, என்றாரவர்.