திருகோணமலைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கான தடை நீக்கம்

இலங்கையின் கிழக்கே திருகோணமலை துறைமுகத்துக்கு அண்டிய கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் இலங்கை அரசால் தளர்த்தப்பட்டுள்ளது.

இத்தடை நீக்கப்பட்டதன் பின்னர் குறித்த கடல்பகுதியில் மீன்பிடிப்பதற்கு மீனவர்கள் அனுமதிப் பத்திரம் பெறவேண்டிய தேவையில்லை எனத் இலங்கை பாதுகாப்பு செயலகம் அறிவித்துள்ளது.