மலாய்க்காரர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையா அல்லது மகாதீருக்கு இக்கட்டான சூழ்நிலையா ?

“மலாய்க்காரர்கள் அந்தத் தீய எண்ணம் கொண்ட மனிதரைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான மலாய்க்காரர்கள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தால் இது அனைவருக்கும் சொர்க்கமாக இருக்கும்.”

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ் அங்கீகாரத்துக்கு மலாய்க்காரர்கள் மீது பழி போடுகிறார் மகாதீர்

பார்வையாளன்: பெர்க்காசா புரவலர் டாக்டர் மகாதீர் முகமட், இனவாதத் தந்தை என அவரது அம்னோ சகா நஸ்ரி அப்துல் அஜிஸ் வருணித்துள்ளதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகிறார்.

ஆகவே அந்த வெறுக்கத்தக்க பொய்யான அபத்தமான இனவாத கருத்துக்கள் அந்த மனிதரிடமிருந்து வந்ததில் வியப்பு ஒன்றுமில்லை.

அம்னோ இந்த நாட்டை சூறையாடுவதை பல மலாய்க்காரர்கள் புரிந்து கொண்டு விட்டதால் அவர்கள் பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களித்து அதனை அதிகாரத்துக்கு கொண்டு வந்து விடுவார்கள் என்ற கவலை மகாதீரை உண்மையிலேயே வாட்டத் தொடங்கியுள்ளது.

அது மட்டும் நிகழ்ந்தால் அவரும் அவருடைய கிரிமினல் கூட்டாளிகளும் தாங்கள் செய்த குற்றங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அடுத்து ஜெயிலுக்கும் போக வேண்டியிருக்கும்.

ஆகவே மகாதீர் மலாய்க்காரர்கள் அம்னோவைக் கைவிடாமல் செய்வதற்காக இப்போது முடிந்த அளவுக்கு இனவாத ஆட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். அதில் அவர் கை தேர்ந்தவர்.

யாப் சிஎஸ்: அவர் இப்போது முழு மூச்சாக இன வெறுப்பைத் தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார். அவருடைய உண்மையான இனவாத முகம் வெளிப்பட்டு விட்டது.

மலாய்க்காரர்களின் நடப்பு இக்கட்டான சூழ்நிலை என அவர் வருணிக்கிறார். தனது பெரும்பான்மையை அந்த சமூகம் பயன்படுத்தத் தவறி விட்டதாக அவர் சொல்கிறார்.

அவர் மலாய்க்காரர் அல்லாதாரைப் பற்றி அக்கறை கொள்ளவே இல்லை. மற்றவர்களை ஒடுக்குவதற்கு மலாய்க்காரர்கள் தங்கள் பெரும்பான்மையைப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவர் எண்ணம்.

சின்ன அரக்கன்: மலாய் சமூகம் சுதந்திரம் பெற்ற பின்னர் தனது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கு தனது பெரும்பான்மையைப் பயன்படுத்தத் தவறி விட்டதாக மகாதீர் சொல்வது மிகவும் தவறான அறிக்கை ஆகும்.

இந்த நாட்டுக்கு 22 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஒருவர் இப்படி முற்றிலும் பொருத்தமற்ற பொறுப்பற்ற அறிக்கையை விடுக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.

அரசாங்கச் சேவை மலாய் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லையா ? அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் உயர் நிலைத் தலைமைத்துவத்தையும் நிர்வாகத்தையும் என்னவென்று சொல்வது ?

நாட்டின் வங்கித் தொழிலில் யார் முதன்மை வகிக்கின்றனர் ? பெட்ரோனாஸ், எம்ஏஎஸ், கேடிஎம்பி, எல்ஆர்டி, எம்ஆர்டி ஆகியவை யார் கட்டுக்குள் இருக்கின்றன ? பொதுப் பல்கலைக்கழகங்களில் யார் துணை வேந்தர்களாக இருக்கின்றனர்.

மலாய்க்காரர்களும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் கெட்டிக்காரர்கள், விவேகமானவர்கள், சுதந்திரம் பெற்ற பின்னர் அவர்கள் மகத்தான முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.

சீனர்களும் முட்டாள்கள் அல்ல.  துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ்களுக்கு அரசாங்க அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது வாக்குகளை வாங்குவதற்கே என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

இந்த நாட்டின் பொதுத் துறை வேலைகளுக்கு விண்ணப்பிப்பது பற்றி சீனர்கள் எண்ணப் போவதில்லை என மகாதீர் உறுதியாக நம்பலாம்.

உலகக் குடி மகன்: நான் மலாய்க்காரனாக இருந்தால் மலாய்க்காரர்களை அவர் முட்டாள்கள் என வருணித்ததை என் மனதைப் புண்படுத்தியுள்ளதாகக் கருதுவேன்.  மலாய்க்காரர்கள் அந்தத் தீய எண்ணம் கொண்ட மனிதரைப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான மலாய்க்காரர்கள் இந்த நாட்டை ஆட்சி புரிந்தால் இது அனைவருக்கும் சொர்க்கமாக இருக்கும்.

வெற்றிலை பாக்கு: இனம், இனம், இனம் என்ற எண்ணத்தை தவிர அவரது சிந்தனையில் எதுவுமே இல்லை. மலேசியா என்பதற்கான உண்மையான அர்த்தத்தை அவர் பரிசீலித்ததே இல்லையா ?

அர்ச்சன்: அந்த மனிதர் மலாய்க்காரர்களை முட்டாள்கள் என்கிறார். அந்த மனிதர் மலாய்க்காரர் அல்ல. மலாய்க்காரர்களைப் பற்றி மசீச தலைவர் சுவா சொய் லெக் அவ்வாறு சொல்லியிருந்தால் அவர் தூக்கில் போடப்பட்டிருப்பார். ஆனால் அவருக்கு துணிச்சல் இல்லை.

அடையாளம் இல்லாதவன்#90975058: இன்றைய மலாய்க்காரர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள். உலகாளவிய சிந்தனைகளைக் கொண்டவர்கள். மகாதீருடைய வேர்கள் இந்தியா கேரளாவில் உள்ளன. ஆகவே அவர் மலாய்க்காரர் அல்ல. மலையாளி.

ஜேம்ஸ்1067: கல்வித் தரம் சீரழிந்து விட்டது. அதைப் பற்றிக் கவலை இல்லை. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிக் கவலை இல்லை. இனம், இனம், இனம் மட்டுமே அவர்களுடைய ஒரே சிந்தனை.

தங்கள் சொந்த ஆதாயத்தை மட்டுமே அந்த அரசியல்வாதிகள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.

அவதார் 111: மகாதீர் சீனர்களுக்கு மட்டுமின்றி இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆபத்தானவர்.

 

TAGS: