இந்தியர்களின் எதிர்காலம் குறித்து அம்னோவுடன் விவாதம் செய்ய பிகேஆர் விருப்பம்

பிகேஆர், மலேசிய இந்தியர்களின் எதிர்காலம் குறித்து பொது விவாதம் செய்ய அம்னோவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அது மஇகா-வுடன் விவாதம் செய்ய விரும்பவில்லை.

“மஇகா, இந்திய சமூகத்தின் பிரச்னைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டது அதனால்தான் அம்னோவுடன் விவாதம் செய்ய விரும்புகிறோம்”, என்று பிகேஆர் தகவல் பிரிவு செயற்குழு உறுப்பினர் கே குணசேகரன் இன்று கூறினார்.

பிஎன் கூட்டணியில் உச்ச அதிகாரம் கொண்டது அம்னோதான் என்பதால் அக்கட்சியுடன் விவாதம் செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.

விரைவில் விவாதத்துக்கு வருமாறு கேட்டுக்கொள்ளும் குறிப்பு ஒன்றை இன்று காலை அம்னோ தலைமையகத்திடம் ஒப்படைத்த பின்னர்
குணசேகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.

TAGS: