60,000 போலி அடையாளக் கார்டுகள்: இசா சட்டம் தேவைப்படும் போது எங்கே போனது?

“நஜிப், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை விரைவாக ரத்துச் செய்ய வேண்டாம். அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய மக்கள் அவர்கள்.”

 

 

 

ஆளும் கட்சிக்கு வாக்களிக்குமாறு குடியுரிமை விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்

பார்வையாளன்: முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட்டும் அவரது பிள்ளைகளான முக்ரிஸ், மரினா- தந்தையினுடைய இன வம்சாவளியை எடுத்துக் கொள்ளும் பாரம்பரியப்படி இந்தியர்களே. காரணம் அவர்களது  தந்தை கேரளாவிலிருந்து வந்த இந்தியர் ஒருவருடைய பிள்ளை.

முஸ்லிம்களான மகாதீர் போன்றவர்கள் மலாய் மொழியைப் பேசுவதாலும் மலாய் பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதாலும் மலாய்க்காரர்கள் என தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

இந்த நாட்டை கொள்ளையடிக்கவும் அதிகாரத்தை பிடிக்கவும் அம்னோவில் உள்ள கலப்பு இன வம்சாவளியைச் சேர்ந்த பலர், தங்களை மலாய்க்காரர்கள் என அழைத்துக் கொண்டு பெரும்பான்மை மலாய்க்காரர்களுடன் நெருக்கமாக பிணைந்துள்ளனர்.

மலாய்க்காரர்களுடைய வாக்குகளைக் கவருவதற்காக அவர்கள் சமய, இனவாதத்தை முடிந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு மலாய்க்காரர்களுடைய நலனில் பாசமோ அல்லது அக்கறையோ இல்லை. சபாவில் “எம் திட்டம்” அதனைத் தெள்ளத் தெளிவாக காட்டி விட்டது.

தேர்தலில் வெற்றி பெற மகாதீர், நூறாயிரக்கணக்கான சட்ட விரோத அந்நியர்களை “பூமிபுத்ராக்களாக” ஆக்கினார். அவர்கள் இப்போது சுதேசி மலாய்க்காரர்கள் அனுபவிக்கும் சலுகைகளைல் சம பங்கு கோருவதாகத் தெரிகிறது. தீவகற்ப மலேசியாவில் அதே போன்ற காரியத்தை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் அம்னோவும் செய்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

பீரங்கி: சபாவில் புதிதாக குடியுரிமை வழங்கப்பட்ட 700,000 பேர் 150 சொற்களைக் கொண்ட கட்டுரையை எழுதுமாறு உள்துறை அமைச்சு கேட்டுக் கொண்டதா? உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேனுக்காக பதில் என்பதில் “இல்லை. ஒரு போதும் இல்லை.”

ஹெடி_யார்: அவர்களுக்கு வாக்களிக்குமாறு புதிய குடிமக்கள் மட்டும் கட்டாயப்படுத்தப்படவில்லை. இராணுவத்தினரும் அரசாங்க ஊழியர்களும் அவ்வாறு செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். அதனால் அவர்கள் தங்களுக்கு மகத்தான வெற்றி கிடைக்கும் என நம்புகின்றனர்.

ரிக் தியோ: அதிகார வேட்கையும் பணத்தாசையும் இந்த நாட்டை அம்னோ   புத்ராக்கள் அந்நியர்களுக்கு விற்பதற்கு வழிகோலியுள்ளது. அம்னோ மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். விரக்தி அடைந்துள்ள நிலையில் அம்னோ வங்காள தேசிகளை குடிமக்களாக்கி அவர்களை பிஎன்-னுக்கு வாக்களிக்குமாறு செய்கிறது.

 இந்தோனிசிய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் சிலாங்கூர் மந்திரி புசாராக பதவி வகித்ததைப் போல நமக்கு வங்காள தேச வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இன்னும் சில ஆண்டுகளில் பிரதமராகக் கிடைப்பார்.

ஜிஎச்கோக்: ஆம் என்று சொல்லி விட்டு உங்கள் குடியுரிமை பெற்றுக் கொள்ளுங்கள். அடுத்து பக்காத்தான் ராக்யாட்டுக்கு வாக்களியுங்கள்.

வில்கிலீக்ஸ் தகவல்கள்: முன்னாள் தேர்தல் ஆணையத் தலைவர் 60.000 போலி அடையாளக் கார்டுகளை வெளியிட்டார்.

பேஸ்: நாம் நீண்ட காலமாக சந்தேகப்பட்ட ஒரு விஷயத்தை அந்தத் தகவல்கள் தெளிவாக்கியுள்ளன. ஜனநாயகத்துக்கும் தனது குடிமக்களுக்கும் மரியாதை கொடுக்காத அம்னோ/பிஎன் அரசாங்கத்திற்கு கிறுக்கு பிடித்து விட்டது. இந்த நாட்டில் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாருமில்லை. அவர்கள் மீது வழக்குப் போடுங்கள். குற்றவாளி எனக் கண்டுபிடிக்கப்பட்டால் தண்டனை கொடுங்கள்.

அனைவருக்கும் நியாயம்: அந்த 600,000 சட்டவிரோத அடையாளக் கார்டு உரிமையாளர்களும்  தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். கடந்த 54 ஆண்டுகளாக தான் செய்து வருகின்ற மோசடிகளை எவ்வளவு காலத்துக்குத்தான் பிஎன் மறுத்துக் கொண்டிருக்க முடியும்? எல்லாம் போதும் போதும்.

கேகன்: பணம், ஊடகம், நிருவாகம், அதிகாரம் ஆகியவை இருந்தும் தேர்தலில் வெற்றி பெற பிஎன் மோசடிகளில் ஈடுபட வேண்டியுள்ளது. அதற்கு உண்மையான ஆதரவு இல்லை என்பதையே அது காட்டுகிறது.

லூயிஸ்: சில டாலருக்காக நாட்டை விற்கக் கூடிய அவர்கள் தயாராக இருக்கின்றனர். எந்த கட்சிகள் சுயநலப் போக்குடையவை. எந்தக் கட்சிகள் மக்கள் நலனுக்குப் போராடுகின்றன என்பது இப்போது தெளிவாக  விட்டது.

‘தேசத் துரோக’ அறிக்கைக்காக மாட் சாபு மீது வழக்குத் தொடர வேண்டிய அவசியம் இல்லை. நமது நாட்டை விற்பதுடன் ஒப்பிடுகையில் அது மிகவும் சிறியது.

களைப்படைந்தவன்: நாம் உண்மைகளையும் கூறிக் கொள்கின்ற விஷயங்களைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்திருக்க வேண்டும். வில்கிலீக்ஸ் தகவல்களுக்கு ஆதாரமில்லை. மெய்பிக்க முடியாதவை. உறுதி செய்யப்படாதவை. எல்லாவற்றுக்கும் மேலாக மூன்றவது மனிதர் சொன்ன விவரங்கள்.

கறுப்பு மம்பா: நஜிப், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை விரைவாக ரத்துச் செய்ய வேண்டாம். அதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய மக்கள் அவர்கள்.

பீரங்கி: அரசியல் எதிர்க்கட்சிகளும் சமூக அமைப்புக்களும் மாற்று ஊடகங்கள் உதவியுடன் அந்த விஷயத்தை சாதாரண மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

அரச விசாரணை ஆணையத்தை அமைக்குமாறு நமது மாமன்னருக்கு மக்கள் மனு கொடுக்க வேண்டும். அந்த விஷயத்தை முழுமையாக ஆராய சுயேச்சை அமைப்பு அவசியமாகும்.

அந்நியர்களுக்கு சட்ட விரோதக் குடியுரிமையும் போலி அடையாளக் கார்டுகளையும்  வழங்குவது தேசத் துரோகமாகும். அது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டல் ஆகும். உண்மைய அறிந்து கொள்ள மக்கள் விரும்புகின்றனர்.

ஏபி சுலைமான்:  இது வெறும் புகை அல்ல. உண்மையான நெருப்பு. தேர்தல் ஆணையமும் தேசியப் பதிவுத் துறையும் அதிலிருந்து  எப்படி விடுபடப் போகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

TAGS: