ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் முன்பு ஊழியராக இருந்த ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் கொண்டுவந்த பாலியல் தொந்தரவு வழக்கில் அந்நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் பீட்டர் ஸ்லிப்பர் பதவி விலகியுள்ளார்.
இந்த ஊழியருக்கு சபாநாயகர் ஸ்லிப்பர் அனுப்பிய கைத்தொலைபேசி குறுந்தகவல்களை நீதிமன்றம் வெளியிட்டதன் பின்னர் ஸ்லிப்பர் பணி துறப்பு செய்ய நேர்ந்துள்ளது.
பெண்களை பாலியல் வக்கிரத்துடன் வர்ணிக்கும் வாசகங்கள் அந்த குறுந்தகவல்களில் உண்டு.
சபாநாயகரின் பதவி விலகல் பிரதமர் ஜூலியா கில்லார்டுக்கு பெரும் பின்னடைவாக வந்துள்ளது. ஏனென்றால் நாடாளுமன்றத்தில் ஒரு இடம் போனாலே அவரது அரசு பெரும்பான்மை இழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.