இலங்கை பிரச்னை குறித்த ஊடகவியலாளர்களின் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கனேடிய பிரதமர் ஸ்டீவன் ஹார்பர் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
செனகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது பிரதமர் ஹார்பரிடம் இலங்கை நடைபெற்ற மனித உரிமை மீறல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக குற்றம் சுமத்தப்படும் கொங்கோவில் நடைபெறும் மாநாட்டில் ஏன் கலந்து கொள்கின்றீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மனித உரிமை நிலைமைகளைக் காரணம் காட்டி இலங்கையில் நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என கனடா அறிவித்திருந்தது.
மனித உரிமை நிலைமைகள் தொடர்பில் கனடா இரட்டை நிலைப்பாட்டை பின்பற்றுகின்றதா என ஊடகவியலாளர்கள் கனேடிய பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கொங்கோவின் மனித உரிமை நிலைமைகள் குறித்து அங்கு பயணம் செய்த கனேடிய அமைச்சர் பெர்னாட் வெல்கோர்ட் ஏற்கெனவே கருத்து வெளியிட்டுள்ளதாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.