தியாகி திலீபனின் நினைவுச் சின்னம் சிங்கள இனவாதிகளால் அழிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் கோவில் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திலீபனின் நினைவுச் சின்னம் அடையாளம் தெரியாதவர்களினால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இது சிங்கள இனவாதிகளின் அட்டூழிச் செயலாக இருக்ககூடும் என கருத்தப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினராகிய திலீபன் இந்திய அமைதிப்படை இலங்கையின் வடபகுதியில் நிலைகொண்டிருந்த போது, ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து சாகும் வரை உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் பேச்சுவார்த்தைகளுக்காக சமாதானம் நிலவிய காலத்தில் திலீபனின் நினைவாகத் தூபியொன்று நல்லூர் ஆலயப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நினைவுத் தூபியே வியாழனிரவு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்லைக்கழக விவகாரம், மாணவர்களின் வகுப்புப் புறக்கணிப்பு, தொடர்ச்சியாகப் பலர் கைது செய்யப்படுவது போன்ற அமைதியற்ற சூழலின் பின்னணியில் திலீபனின் நினைவுத் தூபி நொறுக்கப்பட்டுள்ளமையானது, அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகவே அங்குள்ளவர்களினால் கருதப்படுகின்றது.

TAGS: