நீதிபதி ஷிராணிக்கு ஆதரவாக கொழும்பில் மேலும் ஒரு ஆர்ப்பாட்டம்

இலங்கையின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டுவந்துள்ள பதவி நீக்க கண்டன நடைமுறை மீட்டுக்கொள்ளபடவேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ள்ளனர்.

அரசியல் சாசனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விதிகளை மீறி அரசாங்கம் தலைமை நீதிபதியை பதவிறக்க முயல்கிறது என இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டினார்.

நாட்டை மென்மேலும் இராணுவக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவே நீதித்துறையின் சுதந்திரத்தை அரசாங்கம் ஒடுக்க முயல்கிறது என இலங்கை கத்தோலிக்க மன்றத்தைச் சேர்ந்த அருட்தந்தை சத்தியவேல் தெரிவித்தார்.

ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் செயல்படுவதற்கு தடைபோட வேண்டாம் என ஜனாதிபதி கூறுவது ஏற்புடையதல்ல, ஏனெனில் ஊழல் பேர்வழிகள் பலர் அரசாங்கத்துக்குள்தான் இருக்கின்றனர் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டார். ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் காவல்துறையினர் அதிகமாகக் காணப்பட்டிருந்தது.

TAGS: