நஜிப் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke ) ஏற்பட்டதாகக் கூறப்படுவதை மறுத்தார்

najibகடந்த வார இறுதியில் தமக்கு சிறிய அளவில் பக்கவாதம் ( stroke )ஏற்பட்டதாகக் கூறப்படும் வதந்திகளை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நிராகரித்துள்ளார்.

அதற்குப் பதில் தாம் மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

“ஆகவே புர்சா மலேசியா பங்குச் சந்தை ஆரோக்கியமாக உள்ளது, சந்தையும் ஆரோக்கியமாக உள்ளது, சுக்குக் ( Sukuk )சந்தையும் ஆரோக்கியமாக உள்ளது, நானும் ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என அவர் சொன்னார்.

நஜிப் இன்று கடன் பத்திர, சுக்குக் பரிவத்தனைச் சந்தையை தொடக்கி வைத்து கொள்கை உரையாற்றினார்.

கம்பள வியாபாரியான தீபக் ஜெய்கிஷன் அம்பலப்படுத்திய தகவல்களைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்குதலினால் தமக்கு லேசான பக்கவாதம் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு சரவாக் ரிப்போர்ட் வெளியிட்ட கட்டுரை குறித்து நஜிப் கருத்துரைத்தார்.

 

TAGS: