‘தமிழர்களின் சம உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’

salman-khurshidஇலங்கைத் தமிழ் மக்களின் சம உரிமைகளை உறுதி செய்ய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து அந்த சமூகத்தினருடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென இந்தியா, இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

அத்துடன், போர் காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள் வழங்கப்படும் என இந்தியவெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷிட் தெரிவித்துள்ளார்.

சுய கௌரவத்துடன் கூடிய நீதியான ஒரு தீர்வுத் திட்டமொன்று தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஓர் அடித்தளமொன்று உருவாக்கப்படும் என கருதுவதாக அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேச பயங்கரவாதத் தடுப்பு, போதைப் பொருள் தருப்பு, இரட்டை வரி போன்ற துறைகள் தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவிற்கு பயணம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளார்.

TAGS: