படகுப் பயணங்களைத் தவிர்க்குமாறு தமிழர்களுக்கு ஆஸ்திரேலியா வலியுறுத்தல்

australiaadvertisementsrilankaஇலங்கையிலிருந்து படகுகள் மூலம் புகலிடம் கோரி தமது நாட்டிற்குள் வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஆஸ்திரேலியா அரசாங்கம் மீண்டும் பகிரங்கமாக அறித்துள்ளது.

படகுகள் மூலம் புகலிடம் கோரி சென்றவர்களை நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கும் பணிகளை சில மாதங்களுக்கு முன்னர் ஆரம்பித்துள்ள போதிலும் இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கான சட்ட விரோத பயணங்கள் தொடர்வதாக தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.

இலங்கையிலிருந்து தமது நாட்டிற்குள் படகுகள் மூலம புகலிடம் கொரி வருபவர்கள் தொடர்பாக ஆஸ்திரேலியா அரசாங்கம் இலங்கையில் உள்நாட்டு ஊடகங்கள் மூலம் அறிவித்தல்களை விடுத்துள்ளது.

தமது நாட்டில் தொழில் வாய்ப்புகள் இல்லை, அநேகமாக மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்புதல் மற்றும் விசேட கவனிப்புகள் எதுவும் இருக்காது என அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா குடிவரவு மறறும் பிரஜாவுரிமைகள்அமைச்சர் பிரெண்டன் ஒ கொணர் விடுத்துள்ள செய்தியுடன் இந்த அறித்தல் வெளியாகியுள்ளது.

இவ்வாறானவர்கள் இலங்கைக்கு வரும் அடுத்த விமானத்திலே திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். புகலிடம் பெற நியாயமான காரணங்கள் இல்லையேல் துரிதமாக திருப்பி அனுப்பி வைக்க நேரிடும்.

அவ்வாறான வேளையில் பணமோ அல்லது வேறு எந்தவொரு உதவிகளும் வழங்கப்படமாட்டாது என்று அந்த செய்தியில் ஆஸ்திரேலியா குடிவரவு மறறும் பிரஜாவுரிமைகள்அமைச்சர் பிரெண்டன் ஒ கொணர் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: